அம்மாவுக்கு,...

சனி, 10 செப்டம்பர், 2011
0 கருத்துகள்

உனக்குள்ளே என்னை தாங்கி
உயிர்ஆக்கி வைத்தவளே
உன் ஊண்உருக்கி உதிரம்வழித்து
பாலாக என் பசியாற வைத்தவளே
போய்வருகின்றேன் நான்.
 
நெற்றியில் வெற்றி திலகமிட்டு
விடை கொடுஎன்று வேண்டவில்லை.
கையில் வேல்கொடுத்து விடைதந்து
வெற்றியுடன் திரும்பு என்றும்
போய்வா மகனே என்றும் நீ
சொல்லிவிடவேணும் என்று கேட்கவில்லை.
என்னை புரிந்துகொள் தாயே
அது போதும் எனக்கு.
நீ கொஞ்சிக் கொஞ்சி எனக்கு
சொல்லிக் கொடுத்த
அன்னை மொழியும்,
நீ சின்னஞ்சிறு என் கையைபிடித்து
எழுதப்பழக்கிய என் தேசத்து மண்ணும்
இன்னும் அடிமையாய் அன்னியகால்களுள்
அவதியுறும்போதினில் எப்படியம்மா..?
எத்தனை தூரம் வந்தாலும் இன்னும்
நீ மழைக்காலத்தில் எனக்கு போர்த்திய
உன் புடவை வாசமே எனக்குள் எங்கும்!
நீ என்னை தோளில் தாங்கி நடந்த மண்ணும்
எனக்கு நிலா சோறுஊட்டிய முற்றமும்
என்றைக்கும் எனக்கு விடுதலையின்
தேவையை சொல்லிக்கொண்டே இருக்கும்
  
பெற்ற தாயை நேசிப்பதும்
தாயகவிடுதலையை பூசிப்பதும்
வேறு வேறல்ல தாயே.

மேலும் படிக்க »

எங்கே என் புன்னகை

0 கருத்துகள்

மழைகாலம் என்னை ஆக்கிரமித்திருந்த
உன் நினைவுகள்
கூதலான குளிர் பனிக் காலம்
உனக்கான என் காத்திருப்புகள்
கடலோர அலைகள் எழுதும்
கதைகளில் நமக்கான சில அத்தியாயங்கள்
எல்லாம் இருந்தும் நீ இல்லை
ஓர் சொல்லில் உயிர் குடித்தது
கை அசைவில் உணர்வறுத்து
கண்ணோரம் கண்ணீர் தந்து
அதோ நீ போய்விட்டிருந்தாய் 
ஓர் புன்னகைக்கு எரிமலையை பதிலாக தந்தபடி
அதோ நீ போய்விட்டிருந்தாய்...
மேலும் படிக்க »
 

வந்து போனோர்....

free counters